தமிழ்நாடு பட்ஜெட் உரை 2.07 மணி நேரம்!

தமிழக சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் உரையை நிறைவு செய்தார்.
நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு
நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு
Published on
Updated on
1 min read

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2024-25ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்து உரையாற்றினார்.

சமூக நீதி, கடைக்கோடி மனிதருக்கும் நல்வாழ்வு, உலகை வெல்லும் இளைய தமிழகம், அறிவுசாா் பொருளாதாரம், சமத்துவ நோக்கில் மகளிா் நலம், பசுமைவழிப் பயணம், தாய்த் தமிழும் தமிழா் பண்பாடும் ஆகிய 7 சிறப்பு அம்சங்கள் கொண்ட பட்ஜெட்டாக தயாரிக்கப்பட்டுள்ளதாக தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு
அரசு உதவிப் பெறும் பள்ளி மாணவிகளுக்கும் புதுமைப் பெண் திட்டம்

தமிழகத்தில் 2030ஆம் ஆண்டுக்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும், அரசு உதவிப்பெறும் பள்ளி மாணவிகளுக்கும் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் உதவித் தொகை, அரசு உதவிப்பெறும் பள்ளிகளிலும் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் உள்ளிட்டவை பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

மேலும், மத்திய அரசிடம் இருந்து மெட்ரோ விரிவாக்கத்துக்கு நிதி, பேரிடர் இழப்பீட்டு தொகை உள்ளிட்டவை கிடைக்காததால் நிதிப் பற்றாக்குறை அதிகரித்துள்ளதாக தங்கம் தென்னரசு தனது உரையில் குற்றம்சாட்டினார்.

நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு
3000 புதிய பேருந்துகள்; பிராட்வேயில் புதிய பேருந்து நிலையம்: பட்ஜெட்

காலை 10.02 மணியளவில் உரையை தொடங்கிய அமைச்சர் தங்கம் தென்னரசு பகல் 12.09 வரை 2 மணிநேரம் 7 நிமிடங்கள் சட்டப்பேரவையில் உரையாற்றினார்.

தொடர்ந்து, நாளை வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தாக்கல் செய்யவுள்ளார்.

பொது நிதிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் பேரவையில் பிப். 21-இல் காலை, மாலை இருவேளையும் நடைபெறும். பிப். 22-இல் அமைச்சா்கள் தங்கம் தென்னரசும், எம்.ஆா்.கே.பன்னீா்செல்வமும் விவாதத்துக்குப் பதில் அளித்து பேசுவாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com