வேளாண் நிதிநிலை அறிக்கை 2024-2025: முக்கிய அம்சங்கள்

வேளாண் நிதிநிலை அறிக்கையின் (2024-2025) முக்கிய அம்சங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
வேளாண் நிதிநிலை அறிக்கை 2024-2025: முக்கிய அம்சங்கள்
Published on
Updated on
2 min read

தமிழகத்தில் 2024-25ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேரவையில் இன்று தாக்கல் செய்தார்.

வேளாண் நிதிநிலை அறிக்கையின் (2024-2025) முக்கிய அம்சங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

வேளாண் நிதிநிலை அறிக்கை முக்கிய நோக்கங்கள்:

1. மண்வளத்தைப் பேணிக்காப்பது

i. சமச்சீர் உரமிடல், இரசாயன இடுபொருட்களின் பயன்பாட்டினைக் குறைத்தல்

ii. பசுந்தாள் உரம், நுண்ணுயிர்கள், மண்புழு உரம், உயிரி பூச்சிக்கொல்லி போன்றவற்றின் பயன்பாட்டினை அதிகரித்தல்

iii. உயிர்ம வேளாண்மையை ஊக்குவித்தல்

iv. களர் அமில நிலங்களைச் சீர்ப்படுத்துதல்

v. பயிர்க்கழிவுகளை சிதைக்க பயனுள்ள நுண்ணுயிர்க் கலவையை உருவாக்கிட ஆராய்ச்சி

2. ஊட்டச்சத்துமிக்க விளைபொருட்களை வழங்குவது

i. தோட்டக்கலைப் பயிர்களின் பரப்பு, உற்பத்தியை உயர்த்துதல்

ii. வீட்டுத் தோட்டத்தில் ஊட்டச்சத்துமிக்க பழச்செடிகள்

iii. பாரம்பரிய இரகங்கள்

iv. தேனீ முனையம்

3. மூலிகைப்பயிர் சாகுபடியை ஊக்குவித்தல்

4. புதிய சந்தை வாய்ப்புகளை உருவாக்குதல்

i. உழவர் அங்காடிகள்

ii. இணையவழி வர்த்தகம்

iii. ஏற்றுமதி பயிற்சிகள்

iv. பண்ணை வழி வர்த்தகம்

v. வேளாண் கண்காட்சிகள்

vi. புவிசார் குறியீடு பெறுதல்

5. உணவுதானியப்பயிர்களின் தேவைக்கேற்ற உற்பத்தியை எட்ட பரப்பு விரிவாக்கம் மற்றும் தரிசு நிலங்களை சாகுபடிக்கு மாற்றுதல்

6. வேளாண்மை, தோட்டக்கலைப்பயிர்களின் உற்பத்தித்திறன் அதிகரித்தல்

i. தரமான விதை, உயர் விளைச்சல் தரக்கூடிய விதை, ஜிப்சம், துத்தநாக சல்பேட், நுண்ணூட்ட உரக் கலவை, உள்ளிட்ட இடுபொருட்கள் வழங்குதல்,

ii. பூச்சி, நோய் மேலாண்மை.

iii. உயர் தொழில் நுட்பம்

iv. உயர் விளைச்சலுக்கான அங்கீகாரம் – விருதுகள்

7. விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் ஆபத்தில்லாமல் பயிர்களைக் காத்திடும் நோக்கில் - பயிர்களைக் காத்திட சூரிய சக்தி மின் வேலிகள்

8. அனைவரையும் உள்ளடக்கிய வேளாண் வளர்ச்சியை அடைதல்.

i. சிறு, குறு விவசாயிகளுக்கு முக்கியத்துவம் - கூடுதல் மானியம் (பவர் டில்லர், நுண்ணீர்ப் பாசனம், வேளாண் இயந்திரங்கள் வாங்கிட கூடுதல் மானியம்)

ii. ஆதி திராவிடர், பழங்குடியினருக்கு முக்கியத்துவம்

iii. எளியோர்க்கென இயந்திர வாடகை மையங்கள்

9. விவசாயிகள் நலன்

i. நெல், கரும்பிற்கு ஊக்கத்தொகை

ii. பயிர்க்காப்பீடு

iii. விவசாயிகளுக்குப் பொருளீட்டுக் கடன்

வரம்பினை உயர்த்துதல்

iv. மின்னணு மாற்றத்தகு கிடங்கு இரசீது (e-Negotiable Warehouse Receipt)

v. வேளாண் மின்சாரத்திற்கான இலவச கட்டணத்தொகை

vi. பயிர்க்கடன் வழங்குதல்

vii. ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்போருக்கு

பராமரிப்பு, நடைமுறை முதலீட்டுக் கடன்

viii. பேரிடர் நிவாரணம்

ix. வறட்சித் தணிப்பிற்கான சிறப்பு உதவித் திட்டம் - ஏழு மாவட்டங்கள்

10. நீர் ஆதாரங்களை வலுப்படுத்துதல்

i. இயற்கை வள மேம்பாட்டுப்பணிகள்

ii. சி” , ”டி” பிரிவு வாய்க்கால்களைத் தூர்வாருதல்

iii. மழைநீர் கட்டமைப்புகளை மேம்படுத்துதல்

11. நீர் மேலாண்மை

iv. நுண்ணீர்ப் பாசனம்

v. நெற்பயிருக்கு மாற்றாக, குறைந்த நீர்த் தேவையுடைய மாற்றுப்பயிர்கள்

12. வேளாண் விரிவாக்கம் - வலுப்படுத்துதல்

i. அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில்

நடவுச்செடிகள் விற்பனை மையம்

ii. கிராம வேளாண் முன்னேற்றக் குழு

iii. ”ஒரு கிராமம் ஒரு பயிர்” செயல்விளக்கம்

iv. வட்டாரம் தோறும் தோட்டக்கலைப் பயிர்களுக்கான செயல் விளக்கம்

v. ஒவ்வொரு தோட்டக்கலை வட்டார அலுவலகத்திலும் தகவல் மையம்

13. இளைஞர்களை வேளாண் தொழில் முனை வோராக்குதல்

வேளாண் நிதிநிலை அறிக்கை 2024-2025: முக்கிய அம்சங்கள்
ஒரு கிராமம் ஒரு பயிர் திட்டம் : வேளாண் பட்ஜெட்

14. வேளாண் தொழில் நிறுவனங்களை ஊக்கப்படுத்துதல்

i. வணிகப் பயிர்களை கிடைக்கச்செய்தல் - கரும்பு, பருத்தி, மஞ்சள், முந்திரி, தேங்காய், மரப்பயிர்கள்

ii. புத்தாக்க நிறுவனங்களை (Start-up) ஊக்குவித்தல்

15. வேளாண்மை பணிகளை இயந்திரமயமாக்குதல்

i. நவீன வேளாண் இயந்திரங்களை உருவாக்குதல்

ii. பயிர்சார்ந்த முழுமையான இயந்திரமயமாக்குதல்

iii. இயந்திர வாடகை மையங்கள் அமைத்தல்

iv. நவீன வேளாண் இயந்திரங்கள், கருவிகள் செயல்விளக்கம்

v. நடமாடும் உலர்த்திகள்

16. விவசாயிகளுக்கு தொடர் வருமானம் கிடைக்கச் செய்தல்

i. ஒருங்கிணைந்த பண்ணையம்

ii. வேளாண் காடுகள்

iii. கால்நடை, மீன் வளர்ப்பு

17. வேளாண்மையை பொதுமக்களிடம் எடுத்துச்செல்லுதல்

i. பூங்காக்கள் அமைத்தல்

ii. வேளாண் கண்காட்சிகள்

18. விளைபொருட்களை மதிப்புக்கூட்டுதல்

i. உணவு பதப்படுத்தும் மையங்கள்

ii. விளைபொருட்களுக்கு மதிப்புச்சங்கிலி உருவாக்கம்

iii. உணவுப்பொருட்கள் தரப்பரிசோதனை

iv. பனைப்பொருட்கள் உள்ளிட்ட வேளாண்

விளைபொருட்களுக்கு மதிப்புக்கூட்டுதல் பயிற்சிகள், கருவிகள்

19. வேளாண் ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம்

i. நீரழிவு நோய்க்கு ஏற்ற நெல் இரங்கள் உள்ளிட்ட புதிய இரங்களுக்கான ஆராய்ச்சி

ii. காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ள ஆராய்ச்சி

iii. பூச்சி, நோய்த் தாக்குதலை எதிர்கொள்ள ஆராய்ச்சி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com