வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

பிப். 25-ல் 44 புறநகர் ரயில்கள் ரத்து!

பராமரிப்புப் பணி காரணமாக வரும் பிப். 25 ஆம் தேதி 44 புறநகர் ரயில்கள் சேவை ரத்து செய்யப்படவுள்ளன.

News image
கோப்புப்படம்
Updated On :23 பிப்ரவரி 2024, 12:28 pm

DIN

கோடம்பாக்கம் - தாம்பரம் ரயில் நிலையம் இடையே வரும் ஞாயிற்றுக்கிழமை (பிப். 25) பராமரிப்புப் பணி மேற்கொள்ளவுள்ளதால் 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளதாக சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

கோடம்பாக்கம் - தாம்பரம் ரயில் நிலையம் இடையே பிப். 25-ல் காலை 11 மணி முதல் பிற்பகல் 3.15 மணி வரை பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. இதனால் சென்னை கடற்கரை- தாம்பரம், செங்கல்பட்டு, கடற்கரை - அரக்கோணம் இடையே இயக்கப்படும் மின்சார ரயில்களும், மறுவழித்தடத்தில் தாம்பரம்-கடற்கரை, செங்கல்பட்டு - கடற்கரை இடையே இயக்கப்படும் மின்சார ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளது.

பயணிகள் வசதிக்காக தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு காலை 11.55, பகல் 12.45, பகல் 1.25, பகல் 1.45, பகல் 1.55, பிற்பகல் 2.40, பிற்பகல் 2.55 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். மறுவழித்தடத்தில் செங்கல்பட்டில் இருந்து தாம்பரத்துக்கு காலை 9.30, காலை 9.40, காலை 10.55, காலை 11.05, காலை 11.30, பகல் 12, பகல் 1 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புறநகர் ரயில்கள் ரத்து காரணமாக சிறப்புப் பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்களை கூடுதலாக இயக்க வேண்டும் என்று சென்னை ரயில்வே கோட்டம் கேட்டுக் கொண்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.