6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ராணிப்பேட்டையில் புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு: மா. சுப்பிரமணியம்

ராணிப்பேட்டையில் புற்றுநோய் பாதிப்பு அதிகமாக இருப்பதாக அமைச்சர் மா. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :23 பிப்ரவரி 2024, 9:57 am

DIN

தமிழகத்திலேயே ராணிப்பேட்டை மாவட்டத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது அதிர்ச்சி அளிக்கிறது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஒன்றியத்துக்கு உள்பட்ட குடிமல்லூர் பகுதியில், தனியார் பங்களிப்பு மற்றும் நமக்கும் நாமே திட்டத்தின் கீழ் 6.65 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 19 புதிய துணை சுகாதார நிலையங்களின் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் மற்றும் கைத்தறி துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டு கட்டடங்களை திறந்து வைத்தனர்.

அப்போது பொதுமக்களிடையே பேசிய அமைச்சர் மா.சுபிரமணியம், தமிழகத்தில் தோல் தொழிற்சாலைகள் மற்றும் சாயப்பட்டறைகள் அதிகம் நிறைந்த மாவட்டங்களில் புற்றுநோய் பாதிப்பு என்பது அதிக அளவில் காணப்படுவதாகவும், இதனை கண்டறிய ராணிப்பேட்டை, ஈரோடு, கன்னியாகுமரி, திருப்பத்தூர் ஆகிய 4 மாவட்டங்களில் புற்று நோய் கண்டறியும் சோதனை அரசு சார்பில் நடத்தி வருவதாக தெரிவித்தார்.

குறிப்பாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தமாக 9566 நபர்களுக்கு மேற்கொண்ட புற்றுநோய் பரிசோதனையில், 222 பெண்களுக்கு மார்பக புற்றுநோயும், 290 பேருக்கு கருப்பை புற்றுநோயும், 29 நபர்களுக்கு வாய் புற்றுநோயும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், தமிழக அரசு அவர்களுக்கு உரிய மருத்துவ வசதிகளையும், சிகிச்சையை அளித்து உயிரை காப்பாற்ற நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார்.

அதே போல, தமிழகத்திலேயே ராணிப்பேட்டையில் தான் புற்றுநோய் பாதிப்பு விகிதம் என்பது அதிகமாக உள்ளது என்பது அதிர்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.