இடதுசாரிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கீடு!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அண்ணா அறிவாலயம் (கோப்புப் படம்)
அண்ணா அறிவாலயம் (கோப்புப் படம்)

மக்களவைத் தேர்தலையொட்டி திமுகவுடன் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு இரு கட்சிக்கும் தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

மேலும், எந்த தொகுதியில் போட்டியிடப்படும் என்பது அடுத்தக் கட்டப் பேச்சுவார்த்தை முடிவெடுக்கப்படும் என்று இரு கட்சிகளின் மாநில செயலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கெனவே, கொமதேக மற்றும் முஸ்லீம் லீக் கட்சிகளுக்கு திமுக கூட்டணியில் தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

கடந்த முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோவை, மதுரையிலும், இந்திய கம்யூனிஸ்ட் திருப்பூர், நாகையிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com