புத்தாண்டு- வழிபாட்டுத் தலங்களில் குவிந்த மக்கள்

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு வழிபாட்டுத் தலங்களில் மக்கள் குவிந்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். 
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில்.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில்.

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு வழிபாட்டுத் தலங்களில் மக்கள் குவிந்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். 

2023 ஆம் ஆண்டு நிறைவடைந்து 2024 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு பிறந்துள்ளது. இதையொட்டி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டங்கள் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் நடைபெற்றன. இந்த நிலையில் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு வழிபாட்டுத் தலங்களில் மக்கள் குவிந்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். 

சென்னை தியாகராய நகரில் உள்ள திருப்பதி கோயிலில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபாடு செய்து வருகின்றனர். இதேபோல் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். மேலும் ராமேஸ்வரம் நாமநாதசுவாமி கோயிலிலும், திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலிலும் ஏராளாமான பக்தர்கள் குவிந்ததால் கூட்ட நெரிசலுடன் காணப்படுகிறது. 

இதனிடையே 2024ஆம் ஆண்டின் முதல் சூரிய உதயத்தைக் காண கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். சூரிய உதயத்தைக் காண குமரி திரிவேணி சங்கமம் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். இதேபோல் 2024 ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி தமிழகத்தில் உள்ள தேவாலயங்களிலும் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் சிறப்புப் பிராா்த்தனைகள் நடைபெற்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com