எடப்பாடி பழனிசாமி திகார் சிறைக்கு செல்லும் ரகசியத்தை உரிய நேரத்தில் வெளியிடுவேன்: ஓ பன்னீர்செல்வம்
எடப்பாடி பழனிசாமி திகார் சிறைக்கு செல்லும் ரகசியத்தை உரிய நேரத்தில் வெளியிடுவேன் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.


எடப்பாடி பழனிசாமி திகார் சிறைக்கு செல்லும் ரகசியத்தை உரிய நேரத்தில் வெளியிடுவேன் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொண்டர்களின் உரிமை மீட்புக் குழு ஆலோசனை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு பங்கேற்க வந்த முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
அதிமுக ஒற்றுமையுடன் இருந்தால் தான் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற முடியும். திமுக ஆட்சியில் எது கூறினாலும் செவிடன் காதில் ஊதிய சங்கு போல உள்ளது.
எடப்பாடி பழனிசாமி திகார் சிறைக்கு செல்லும் ரகசியத்தை உரிய நேரத்தில் உரிய இடத்தில் தெரிவிப்பேன். கேபி முனுசாமியின் கருத்துகளுக்கு எதிர் கருத்து தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என அவர் தெரிவித்தார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...