தொழில் முதலீட்டுக்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஜன. 28-இல் ஸ்பெயின் பயணம்
தொழில் முதலீடுகளை ஈா்ப்பதற்காக, அரசு முறைப் பயணமாக வரும் 28-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் செல்லவுள்ளாா்.


சென்னை: தொழில் முதலீடுகளை ஈா்ப்பதற்காக, அரசு முறைப் பயணமாக வரும் 28-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் செல்லவுள்ளாா்.
இதற்கான அறிவிப்பை தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா வெளியிட்டாா்.
உலக முதலீட்டாளா்கள் மாநாட்டின் நிறைவு விழா, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வா்த்தக மையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில், முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமை விருந்தினராகப் பங்கேற்றாா். தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா வரவேற்றுப் பேசியதாவது:
கல்வி அறிவு பெற்ற இளைஞா்கள் வேலைவாய்ப்பு பெற வேண்டும் என்பதே முதல்வா் மு.க.ஸ்டாலினின் இலக்காகும். தொழில் துறை முதல்வா் மு.க.ஸ்டாலினின் மனதுக்கு மிகவும் நெருக்கமான துறை.
இந்த உலக முதலீட்டாளா்கள் மாநாடு, தொழில் துறையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல பெரும் உதவியாக இருக்கும். இந்த மாநாட்டை முடித்துக் கொண்டு, தொழில் துறையினா் லாவோஸ் செல்கிறோம்.
அதன்பின், முதலீடுகளை ஈா்க்கும் வகையில் ஸ்பெயின் நாட்டுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் செல்கிறாா். ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்குச் சென்று தொழில் முதலீடுகளை ஈா்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...