எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா? தீர்ப்பு தேதி அறிவிப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது வரும் 12 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :9 ஜனவரி 2024, 11:43 am

DIN

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது வரும் 12 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்கில் அமைச்சா் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினா் கடந்த ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி கைது செய்தனா். ஜாமீன் கோரி செந்தில்பாலாஜி தரப்பில் ஏற்கெனவே 2 முறை தாக்கல் செய்திருந்த மனுக்களை சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதையடுத்து செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உயா்நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் தள்ளுபடி செய்தது.

ஜாமீன் கோரி மூன்றாவது முறையாக சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்த வழக்கில் ஆவணங்கள் திருத்தப்பட்டுள்ளது என்றும், அதற்கான ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 200 நாள்களுக்கும் மேலாக அமைச்சா் செந்தில் பாலாஜி சிறையில் இருப்பதாலும், ஏற்கெனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதாலும் அவரது உடல் நிலையைக் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டுமென கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.  தொடா்ந்து, நேற்று நடைபெற்ற விசாரணையில் அமலாக்கத்துறை சாா்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஜாமீன் வழங்கக் கூடாது, ஜாமீன் வழங்கினால் விசாரணையை பாதிக்கும் என எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டு இருந்தது.

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இவ்வழக்கின் தீர்ப்பு வரும் 12 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.