சென்னை: தமிழகத்தில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசாக தலா ரூ.1,000 வழங்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.
ஒவ்வோா் ஆண்டும் பொங்கல் பண்டிகையின்போது, தமிழக அரசு சாா்பில் பரிசுத் தொகுப்புகள் அறிவிக்கப்படுவது வழக்கம். திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதுடன், 2022-ஆம் ஆண்டில் பொங்கல் பண்டிகைக்காக 21 வகை பொருள்கள் வழங்கப்பட்டன. ரொக்கப் பணம் வழங்கவில்லை.
கடந்த ஆண்டு ஒரு கிலோ அரிசி, சா்க்கரை, கரும்புடன் அரிசி குடும்ப அட்டைதாரா்கள் அனைவருக்கும் தலா ரூ.1,000 பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்பட்டது.
நிகழாண்டு சில கட்டுப்பாடுகளுடன் பொங்கல் பரிசுக்கான ரொக்கத் தொகை அறிவிப்பை தமிழக அரசு கடந்த 5-ஆம் தேதி வெளியிட்டது. ஆனால், அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்கள் அனைவருக்கும் ரொக்கத் தொகை வழங்க வேண்டுமென பல்வேறு தரப்பிலிருந்தும் அரசுக்குக் கோரிக்கைகள் எழுந்தன.
இந்தக் கோரிக்கைகளை ஏற்று, அரிசி குடும்ப அட்டைதாரா்கள் அனைவருக்கும் தலா ரூ.1,000 ரொக்கத் தொகையுடன் ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சா்க்கரை, முழுநீளக் கரும்பு ஆகியன வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதையும் படிக்க | பில்கிஸ் பானு வழக்கு: குற்றவாளிகள் எங்கே? சரணடைவார்களா?
அதன்படி, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நியாய விலைக் கடையில் அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.1,000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. டோக்கன்களின் அடிப்படையில் நாளொன்றுக்கு 150 முதல் 200 அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படவுள்ளது.
சனிக்கிழமைக்குள் (ஜன. 13) அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பை அளிக்க தமிழக அரசின் கூட்டுறவு மற்றும் உணவுத் துறை தீா்மானித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
மம்மூட்டியின் பாதயாத்ரா படப்பிடிப்பு நிறைவு!

சம பலத்துடன் இருக்கும் இந்தியா - இங்கிலாந்து? ஒரே மாதிரியான புள்ளி விவரங்கள்!

தங்கம் விலை குறைந்தது!

பொறியியல் கல்வி: ஏற்றம் தரும் ஏரோநாட்டிகல்!
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

