கோப்புப்படம்
கோப்புப்படம்

பலத்த காற்று எச்சரிக்கை: தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை

வங்கக்கடல் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விசைப்படகு மீனவர்கள் வியாழக்கிழமை மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை.
Published on

தூத்துக்குடி: வங்கக்கடல் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விசைப்படகு மீனவர்கள் வியாழக்கிழமை மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை.

வங்க கடல், மன்னர் வளைகுடா, குமரிக்கடல் உள்ளிட்ட பகுதிகளில் 40 கி.மீ முதல் 60 கி.மீ வரை பலத்த காற்று வீசக்கூடும் எனவும், அவ்வப்போது சுழல் காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

எனவே, தூத்துக்குடி மாவட்ட மீன்வளத்துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் நாட்டுப் படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் வியாழக்கிழமை கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும், ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் பத்திரமாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டது. 

அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com