பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்
தமிழகத்தில் அனைத்து அரிசி அட்டைதாரா்களுக்கும் ரூ.1,000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

சென்னை ஆழ்வார்பேட்டை ஸ்ரீராம் நகரில் உள்ள நியாயவிலைக் கடையில் புதன்கிழமை அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு, இலவச வேட்டி, சேலைகளை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்.









