விஜயபாஸ்கர் மீதான வழக்கு ஜன. 31க்கு ஒத்திவைப்பு!

அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை ஜனவரி 31-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 
சி. விஜயபாஸ்கர்
சி. விஜயபாஸ்கர்


அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை ஜனவரி 31-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக உறுப்பினராக உள்ள சி. விஜயபாஸ்கர் மீது, அதிமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் விஜயபாஸ்கர், அவரது மனைவி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தது. 

இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே குற்றப்பத்திரிகை மற்றும் 17,000 பக்கங்கள் கொண்ட சொத்து ஆவண நகல்கள் தாக்கலாகின. அதன் நகல்கள் விஜயபாஸ்கருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு சார்பில் கூடுதல் அரசு வழக்குரைஞர் ஹேமந்த்குமார் ஆஜரானார். 

இந்த நிலையில், ஜனவரி 31-ம் தேதிக்கு வழக்கு விசாரணையை நீதிபதி கே. பூர்ண ஜெய ஆன்ந்த் ஒத்திவைத்தார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com