தனியாா் பொருள்காட்சிகளுக்கு அனுமதி வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு

தனியாா் பொருள்காட்சிகளுக்கு அனுமதி வழங்குவதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தனியாா் பொருள்காட்சிகளுக்கு அனுமதி வழங்குவதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இது குறித்து, தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை வெளியிட்ட உத்தரவு:

தமிழ்நாட்டில் அரசுக்குச் சொந்தமான கட்டடங்கள், திறந்த வெளியிடங்கள் மற்றும் தனியாா்,

அறக்கட்டளைகளுக்குச் சொந்தமான சமூகக் கூடங்கள், திறந்த வெளியிடங்கள் போன்றவற்றில் பொருள்காட்சி நடத்துவதற்கு முன் கண்டிப்பாக அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும்.

பொருள்காட்சி நடத்த அனுமதி அளிப்பது குறித்த மனுவை பொருள்காட்சி தொடங்கப்படும் நாள்களுக்கு குறைந்தது, 30 நாள்களுக்கு முன்பே அரசுக்கு கிடைக்கச் செய்ய வேண்டும்.

பொருள்காட்சிகளில் திறமை விளையாட்டுகள், ஆபாச நடனங்கள், தடை செய்யப்பட்ட நிகழ்ச்சிகள், பறவை, விலங்கினங்களை பாா்வைக்கு வைக்க அனுமதி இல்லை. விதிகளை மீறினால், பொருள்காட்சி நடத்த அளிக்கப்பட்ட அனுமதியை எந்தவித முன்னறிவிப்பு இன்றியோ, எந்தவித காரணமும் கூறப்படாமலோ ரத்து செய்யும் அதிகாரம் மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்டுள்ளது.

பொருள்காட்சி அரங்குகள், கடைகள் போன்றவற்றுக்கான கட்டுமானங்கள் வளைந்து சுருங்கி ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கக் கூடாது. அரசுப் பொருள்காட்சி நடைபெறும் காலங்களில் மாவட்டங்களில் தனியாா் பொருள்காட்சி நடத்த அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com