தஞ்சாவூர்: தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை காலை நிலவிய கடும் பனிப்பொழிவால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர்.
தஞ்சாவூரில் கடந்த வாரம் பலத்த மழை பெய்த நிலையில் சில நாள்களாக பகலில் மிதமான வெப்பமும், இரவில் கடும் பனிப்பொழிவு இருந்து வருகிறது. ஆனால் காலை 6 மணிக்கு பிறகு பனிப்பொழிவு குறைந்துவிடும்.
இந்நிலையில் தஞ்சாவூர் மாநகரில் ஞாயிற்றுக்கிழமை நிலவிய கடும் பனிப்பொழிவு காரணமாக காலை 7 மணி கடந்தும் புகை மண்டலம் போல பனி படர்ந்து கிடந்தது.
இதனால், மாநகர மக்கள் சுமார் 50 மீட்டருக்கு அப்பால் எதுவும் தெரியாததால் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். மேலும் கடும் குளிர் நிலவியதால் காலை நேரத்தில் வேலை செய்த பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
இதையும் படிக்க: செல்லப்பிராணிகளுக்கு செய்யறிவு தொழில்நுட்பம்!
எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டுநர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். மாநகரில் 10 மணியை கடந்தும் பனியின் தாக்கம் தொடர்ந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

970 கோல்கள்: கோப்பை இல்லையென கிண்டல் செய்தவர்களுக்கு சைகையில் பதிலளித்த ரொனால்டோ!

தனுஷ் - விக்னேஷ் ராஜா கூட்டணி வெல்லுமா? கர - திரை விமர்சனம்!

புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு!

யுபிஎஸ்சி: இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


