மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

காட்டுமன்னார்கோயில் அருகே இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: 2 பேர் பலி

காட்டுமன்னார்கோயில் அருகே இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் பலியாகினர்.

News image

தாமோதர கண்ணன், கவிதாஸ்.

Updated On :14 ஜனவரி 2024, 5:59 am

சிதம்பரம்: காட்டுமன்னார்கோயில் அருகே இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் பலியாகினர்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் பேரூராட்சிக்கு உள்பட்ட ஓமாம்புலியூர் ரோடு பகுதியில்  வசிப்பவர் 16-வது வார்டு திமுக பேரூராட்சி மன்ற உறுப்பினர் விஜயலட்சுமி. இவரது கணவர் தாமோதர கண்ணன் .

இவர் சனிக்கிழமை  இரவு தஞ்சை மாவட்டம் வல்லம் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் தனது மகள் மினிஷா என்பவர் பொங்கல் விடுமுறையை ஒட்டி   அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டியிலிருந்து மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு காட்டுமன்னார்கோயில் நோக்கி வந்தார். 

அப்போது காட்டுமன்னார்கோயிலில் இருந்து  ஷண்டன் கிராமத்தைச் சேர்ந்த கவிதாஸ் மற்றும் பின்னால் அமர்ந்து இருந்த அதே ஊரைச் சேர்ந்த அவரது நண்பர் விக்கி ஆகிய இருவரும்  சண்டன் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் வீரானந்தபுரம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது  எதிர்பாராத விதமாக இரு மோட்டார் சைக்கிள்களும்  நேருக்கு நேர் மோதியதில் நான்கு பேரும் தூக்கி வீசப்பட்டனர். 

இதில் சம்பவ இடத்திலேயே தாமோதர கண்ணன் வயது 55 மற்றும் மற்றொரு  மற்றொரு மோட்டார் பைக் ஓட்டி வந்த கவிதாஸ் வயது 21  ஆகிய இருவரும் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே இறந்தனர். 

மேலும் காயமடைந்த தாமோதரனின் மகள் மினிசா வயது 19, மற்றும்  மற்றொரு மோட்டார் பைக்கில் பின்னால் அமர்ந்து வந்த விக்கி வயது 19 ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர்.

 சம்பவ இடத்திற்கு வந்த காட்டுமன்னார்கோயில் இன்ஸ்பெக்டர் ஏழுமலை, சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் சடலங்களை கைப்பற்றி காட்டுமன்னார்கோயில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

பலத்த காயமடைந்த மினிஷா மற்றும் விக்கி ஆகிய இருவரையும் காட்டுமன்னார்கோயில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

இது குறித்து காட்டுமன்னார்கோயில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.