'நாடு ராமர் மயமாகி வருகிறது': ஆளுநர் ஆர்.என்.ரவி

நாடு தற்போது ராமர் மயமாகி வருவதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

திருச்சி: நாடு தற்போது ராமர் மயமாகி வருவதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் இன்று திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருகை புரிந்தார்.  அவருக்கு அர்ச்சகர்கள் பூரண கும்ப மரியாதை அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து சாமி தரிசனம் செய்த ஆளுநர், தாயர் சன்னதி அருகே உள்ள ஸ்ரீ மேட்டழகிய சிங்கர் சன்னதி படிக்கட்டுகளை தனது மனைவியுடன் நீர் கொண்டு கழுவி சுத்தம் செய்தார்.

இதையும் படிக்ககுருவாயூர் கோயிலில் மோடி தரிசனம்!
 
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆளுநர்,

“நம்முடைய வாழ்க்கையில் கோயில்கள் மையமாக அமைந்துள்ளது. ஒரு கிராமம் உருவாவதற்கு முன்பாக அங்கு கோயில்கள் அமைக்கப்படும். அதனை மையப்படுத்தியே அந்த கிராமங்களின் வளர்ச்சி இருக்கும். அந்த வகையில் ஒரு ஈர்ப்பு விசையாக கோயில்கள் உள்ளது. 

காலனியாதிக்க காலத்தில் அது மழுங்கடிக்கப்பட்டது. தற்போது மீண்டும் நாடு ராமர் மயமாகி வருகிறது. 

அயோத்தி ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை நடத்தப்படுவது நாடு முழுவதும் உள்ள மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காரணம் ராமபிரான் ஒவ்வொருவரின் இதயங்களிலும் வாழ்கிறார்.” எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com