சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

மக்களவைத் தேர்தல்: தமிழகத்துக்கான குழுவை அறிவித்தது காங்கிரஸ்

மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி உள்ளிட்டோர் அடங்கிய தமிழகத்துக்கான தேர்தல் குழுவை காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.

News image
Updated On :18 ஜனவரி 2024, 12:36 pm

DIN


மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி உள்ளிட்டோர் அடங்கிய தமிழகத்துக்கான தேர்தல் குழுவை காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.

இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. பல்வேறு அரசியல் கட்சிகளும் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன.

கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை சூடுபிடித்துள்ள நிலையில், தொகுதிப் பங்கீடுகள், பூத் கமிட்டி பணிகள் என தேர்தல் காய்ச்சல் நாடு முழுவதும் பரவி வருகிறது.

இந்த நிலையில், மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையிலான 35 பேர் கொண்ட தேர்தல் குழுவை காங்கிரஸ் அறிவித்திருக்கிறது. இந்த பட்டியலில் நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், எம்எல்ஏக்கள் பலரும் இடம்பெற்றுள்ளனர்.

Story image

அதில், ப. சிதம்பரம், செல்வப் பெருந்தகை, கே.வி. தங்கபாலு, ஈவிகேஎஸ் இளங்கோவன், திருநாவுக்கரசர், ஜோதிமணி, கார்த்தி சிதம்பரம், விஜய் வசந்த், பீட்டர் அல்போன்ஸ், சுதர்சன் நாச்சியப்பன், செல்லகுமார், மாணிக்கம் தாகுர், குமரி அனந்தன், மணி சங்கர் ஐயர், தனுஷ்கோடி ஆதித்தன், கிருஷ்ணசுவாமி, கே.ஆர். ராமசாமி, விஷ்ணு பிரசாத், ஜே.எம். ஆரூண், நாசே ராமச்சந்திரன், மோகன் குமார மங்கலம் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.