சேலம் இளைஞரணி மாநாட்டுச் சுடரை பெற்றுக்கொண்ட முதல்வர் ஸ்டாலின் 

சேலம் இளைஞரணி மாநாட்டுச் சுடரை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சர் உதயநிதி ஒப்படைத்தார்.
சேலம் இளைஞரணி மாநாட்டுச் சுடரை பெற்றுக்கொண்ட முதல்வர் ஸ்டாலின் 

சேலம் இளைஞரணி மாநாட்டுச் சுடரை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சர் உதயநிதி ஒப்படைத்தார்.

திமுக இளைஞர் அணியின் இரண்டாவது மாநில மாநாடு சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் நாளை மிக பிரமாண்டமான முறையில் நடைபெற உள்ளது. இதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளை இளைஞா் அணி மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், மாநாட்டுச் சுடா் ஓட்டத்தை இளைஞா் அணிச் செயலரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சென்னையில் புதன்கிழமை தொடங்கிவைத்தார். சுடா் ஓட்டம் 316 கிமீ தொலைவு பயணித்து மாநாடு நடைபெறவுள்ள சேலத்தை இன்று வந்தடைந்தது. 

அதனை திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் பெற்றுக்கொண்டார். இதனைத்தொடர்ந்து 1500 ட்ரோன்கள் பங்கேற்ற பிரம்மாண்ட ட்ரோன் ஷோ முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நடத்தப்பட்டது. அப்போது வானில் ஜொலித்த ட்ரோன் ஷோவை முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கண்டு மகிழ்ந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com