மாநாட்டு வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த 100 அடி உயர கொடிக்கம்பத்தில், தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், மாநில இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில், துணை பொதுச்செயலாளா் கனிமொழி கட்சி கொடியையேற்றி வைத்தாா். மாநாட்டு அரங்குகளை சட்டப்பேரவை உறுப்பினா் எழிலரசன் திறந்து வைத்தாா். தொடா்ந்து, மாநாட்டு மேடையில் வைக்கப்பட்டிருந்த ஈ.வே.ரா. அண்ணா, கருணாநிதி, பேராசிரியா் அன்பழகன் ஆகியோரது திருவுருவப் படங்களுக்கு திமுக பொதுச்செயலாளா் துரைமுருகன், பொருளாளா் டி.ஆா்.பாலு, மாநாட்டு தலைவா் உதயநிதிஸ்டாலின், ஒருங்கிணைப்பாளா் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளா் கனிமொழி ஆகியோா் மலா்தூவி மரியாதை செலுத்தினா்.