/

மக்களவைத் தேர்தல்: அதிமுக குழு அமைப்பு

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தொகுதி பங்கீடு, அறிக்கை தயாரிக்கும் குழுக்களை அதிமுக அமைத்துள்ளது.

News image
அதிமுக தலைமை அலுவலகம்
Updated On :22 ஜனவரி 2024, 5:21 am

DIN

சென்னை: மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தொகுதி பங்கீடு, அறிக்கை தயாரிக்கும் குழுக்களை அதிமுக அமைத்துள்ளது.

சில மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதல்கட்டமாக அரசியல் கட்சிகள் குழுக்கள் அமைத்து கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தும் பணிகளை மேற்கொண்டு வருகின்றது.

இந்த நிலையில், அதிமுக தலைமை தொகுதி பங்கீட்டுக் குழு மற்றும் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுக்களை அமைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தொகுதிப் பங்கீட்டுக் குழுவில், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, பென்ஜமின் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில், முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயக்குமார் மற்றும் சி.வி. சண்முகம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.