ஒடிசாவில் குளிர் அலை அதிகரிக்க வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

அடுத்த இரண்டு நாட்களுக்கு ஒடிசாவின் சில பகுதிகளில் குளிர் அலைகள் கடுமையாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஒடிசாவில் குளிர் அலை அதிகரிக்க வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

புவனேஸ்வர்: அடுத்த இரண்டு நாட்களுக்கு ஒடிசாவின் சில பகுதிகளில் குளிர் அலைகள் கடுமையாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடமேற்கு திசையிலிருந்து குளிர்ந்த மற்றும் வறண்ட காற்று வீசுவதால், வடக்கு ஒடிசாவில் ஒரு சில மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு குளிர் அலை நிலவும் வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையத்தின் மூத்த வானிலை விஞ்ஞானி உமா ஷகர் தாஷ் தெரிவித்தார்.

இந்நிலையில் சுந்தர்கர், ஜார்சுகுடா, தியோகர், கியோஞ்சர் மற்றும் அங்குல் மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜார்சுகுடா, சுந்தர்கர், கியோஞ்சர், தியோகர் மற்றும் அங்குல் ஆகிய இடங்களில் நாளை காலை 8.30 மணி வரை குளிர் அலை நிலவக்கூடும் என்று வானிலை அலுவலகம் தெரிவித்துள்ள வேளையில், மாவட்டங்களில் பல இடங்களில் அடர்த்தியானது முதல் மிதமானது வரை மூடுபனி ஏற்படக்கூடும் என்று கணித்துள்ளது.

அடுத்த வரும் மூன்று நாட்களுக்கு குறைந்தபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் இருக்காது என்றும், அதன் பிறகு படிப்படியாக 2-3 டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், கடந்த 24 மணி நேரத்தில் சுந்தர்கரில் உள்ள கீரியில் வெப்பநிலை அளவானது 6 டிகிரி செல்சியஸாகக் குறைந்தது. அதே வேளையில் ரூர்கேலா, ஜார்சுகுடா, சுந்தர்கர், அங்குல் மற்றும் கோராபுட் ஆகிய ஒன்பது இடங்களில் இரவு வெப்பநிலையானது 12 டிகிரி செல்சியஸுக்கும் குறைவாக பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com