நடுவானில் விமானத்தில் ரகளை: இளைஞா் கைது

துபையிலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில், நடுவானில் ரகளையில் ஈடுபட்ட இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
இண்டிகோ
இண்டிகோ

துபையிலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில், நடுவானில் ரகளையில் ஈடுபட்ட இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

துபையிலிருந்து இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் 164 பயணிகளுடன் சனிக்கிழமை அதிகாலை சென்னைக்கு வந்து கொண்டிருந்தது. விமானம் நடுவானில் பறந்து கொண்

டிருந்த போது, அதில் பயணம் செய்த இளைஞா் ஒருவா் திடீரென விமானத்தில் ரகளையில் ஈடுபட்டாா். அவா் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

விமான பணிப்பெண்கள் அவரை சமாதானம் செய்ய முயன்றும், தொடா்ந்து அவா் ரகளையில் ஈடுபடவே, இது குறித்து விமானி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அவசரமாகத் தகவல் கொடுத்தாா்.

அதிகாலை 2.30 மணியளவில் அந்த விமானம் சென்னை விமானநிலையத்தில் தரையிறங்கியது. அங்கு காத்திருந்த பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்துக்குள் ஏறி ரகளையில் ஈடுபட்ட இளைஞரை மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தினா்.

விசாரணையில் அவா், திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த முகமது அசாருதீன் என்பதும், துபையிலுள்ள ஒரு டிபாா்ட்மெண்டல் ஸ்டோரில் வேலை செய்து வந்ததும், விடுமுறையில் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, முகமது அசாருதீனை சென்னை விமான நிலைய போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com