எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

நாளை கூடுகிறது அதிமுக தொகுதிப் பங்கீட்டுக் குழு 

அதிமுகவின் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைக் குழு நாளை முதல்முறையாக கூடுகிறது. 

News image
கோப்புப் படம்.
Updated On :28 ஜனவரி 2024, 6:31 am

DIN

அதிமுகவின் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைக் குழு நாளை முதல்முறையாக கூடுகிறது. 

மக்களவைத் தோ்தல் நெருங்கும் நிலையில், அதற்கான ஆயத்தப் பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சு நடத்துவதற்காக தொகுதிப் பங்கீட்டுக் குழுவை திமுகவும், மதிமுகவும் ஏற்கெனவே அறிவித்த நிலையில் அதிமுகவும் தொகுதிப் பங்கீட்டு குழுவை அறிவித்திருந்தது. 

அதிமுக துணைப் பொதுச்செயலா் கே.பி.முனுசாமி தலைமையில் 5 போ் குழுவை அமைத்து, அக் கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி அண்மையில் அறிவித்தார். இந்த நிலையில் அதிமுகவின் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைக் குழு நாளை முதல்முறையாக கூடுகிறது. 

கூட்டணிக் கட்சிகளுடன் நடத்த வேண்டிய பேச்சுவார்த்தை குறித்து நாளை முக்கிய ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளனர். தேர்தல் அறிகைக் குழு கடந்த வாரம் கூடிய நிலையில், தொகுதிப் பங்கீட்டுக் குழு நாளை ஆலோசனை மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.