கீழவெண்மணி தியாகியை சந்தித்த  ஆளுநர் ஆர்.என். ரவி!

கீழவெண்மணியைச் சேர்ந்த தியாகி ஜி.பழனிவேலை  ஆளுநர் ஆர். என். ரவி ஞாயிற்றுக்கிழமை சந்தித்து நலம் விசாரித்தார்.
கீழவெண்மணியில் தியாகி பழனிவேலை சந்தித்த ஆளுநர் ரவி.
கீழவெண்மணியில் தியாகி பழனிவேலை சந்தித்த ஆளுநர் ரவி.

கீழ்வேளூர்: கீழவெண்மணியைச் சேர்ந்த தியாகி ஜி.பழனிவேலை  ஆளுநர் ஆர். என். ரவி ஞாயிற்றுக்கிழமை சந்தித்து நலம் விசாரித்தார்.

நாகையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி ஞாயிற்றுக்கிழமை நாகை வந்தடைந்தார். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கீழவெண்மணியில் 1968-ஆம் ஆண்டு நிலச்சுவாண்தாரர்களுக்கும், கூலித் தொழிலாளர்களுக்கும் ஏற்பட்ட கூலி உயர்வு தகராறில்  கூலித்தொழிலாளிலாளர்கள் 44 பேர் எரித்துக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் உயிர் பிழைத்த தியாகி ஜி.பழனிவேலை (82) ஆளுநர் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது நடைபெற்ற சம்பவம் தொடர்பான நிகழ்வுகளை கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து வேளாங்கண்ணியில் நடைபெறும் நிகழ்ச்சிக்காக ஆளுநர் சாலை மார்க்கமாக புறப்பட்டார்.

கீழவெண்மணி பகுதியில் ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர்.

தியாகி ஜி.பழனிவேலை சந்தித்து நலம் விசாரித்த ஆளுநர்,அப்போது நடைபெற்ற சம்பவம் தொடர்பான நிகழ்வுகளை கேட்டறிந்தார்.
 
இந்த சந்திப்பு குறித்து தியாகி பழனிவேல் கூறியது: கீழ்த்தட்டு மக்களையும், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களையும் முன்னேற்றும் நிகழ்வாகவே இதை நான் பார்க்கிறேன். உடல்நிலை சரியில்லாத போதும் இந்த சந்திப்பு மூலம் இந்த பகுதி மக்களின் வாழ்க்கை தரம் மேம்பட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு மருத்துவமனைக்கு செல்லாமல் ஆளுநரை சந்திப்பதற்காக காத்திருந்தேன்.

தியாகி ஜி.பழனிவேலுக்கு பொன்னாடை போர்த்திய ஆளுநர் ஆர்.என். ரவி

இங்கு நிலச்சுவாண்தாரர்களால் பாதிக்கப்பட்ட மக்கள் மட்டுமே உள்ளனர். எனவே தாங்களால் இயன்ற உதவிகளை இந்த பகுதி மக்களுக்கு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்ததாக தெரிவித்தார்.

முன்னதாக ஆளுநர் வருகையை கண்டித்து கம்யூனிஸ்ட், காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சியினர் வெண்மணி பகுதியில் கருப்புக் கொடி காட்ட முயற்சித்தனர். அவர்களை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com