மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மேட்டூர் அருகே சாலை விபத்தில்  கணவன் - மனைவி பலி!

மேட்டூர் அருகே சாலை விபத்தில் கணவன் - மனைவி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :28 ஜனவரி 2024, 6:05 am

மேட்டூர் அருகே சாலை விபத்தில் கணவன் - மனைவி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த குஞ்சாண்டியூர் புதூரைச் சேர்ந்தவர் அழகேசன். இவர் கட்டடத் தொழிலாளி (29). இவரது மனைவி இளமதி (25). இன்று காலை கணவன் - மனைவி இருவரும் குழந்தைகள்  கிஷோர் (வயது 5), திருத்தி வயது (2) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் பண்ணவாடியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுக் கொண்டு இருந்தனர். 

ராமன்நகர் அருகே வந்தபோது  பின்னால் அதிவேகமாக வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிள் லாரியின் சக்கரத்தில் சிக்கியது. கணவன் - மனைவி இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர். 

குழந்தைகள் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இதில் கிஷோருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. மேட்டூர் அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சைக்கு பிறகு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

கணவன் - மனைவி இருவரது சடலங்களையும் கருமலை கூடல் காவல் துறையினர் கைப்பற்றி மேட்டூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைத்துள்ளனர். 

உறவினர் வீட்டிற்கு சென்றபோது கணவன் - மனைவி விபத்தில் உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இவ்விபத்து காரணமாக மேட்டூர் மேச்சேரி சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து தடைப்பட்டது. 

காவல் துறையினர் விபத்துக்கு உள்ளான மோட்டார் சைக்கிளையும் லாரியையும் அப்புறப்படுத்திய பிறகு போக்குவரத்து சீரானது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.