நிதிஷ்குமாரை தொடர்ந்து கேஜரிவாலும் வெளியேறுவார்: பிப்லப்குமார் தேவ்

பிகார் முதல்வர் நிதிஷ்குமாரை தொடர்ந்து தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலும் இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறுவார் என திரிபுரா முன்னாள் முதல்வர் பிப்லப்குமார் தேவ் தெரிவித்தார்.
நிதிஷ்குமாரை தொடர்ந்து கேஜரிவாலும் வெளியேறுவார்: பிப்லப்குமார் தேவ்


சென்னை: பிகார் முதல்வர் நிதிஷ்குமாரை தொடர்ந்து தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலும் இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறுவார் என திரிபுரா முன்னாள் முதல்வர் பிப்லப்குமார் தேவ் தெரிவித்தார்.

பாஜகவுக்கு எதிரான இந்தியா கூட்டணியை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகித்த பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா், அந்த கூட்டணியில் இருந்து வெளியேறி பாஜகவுடன் கைகோத்துக் கொண்டு முதல்வா் பதவியையும் தக்கவைத்துக் கொண்டாா்.

ஞாயிற்றுக்கிழமை காலை முதல்வர் பதவியை ராஜிநாமா செய்த நிதிஷ்குமார், பாஜக ஆதரவுடன் மாலை முதல்வராக பதவியேற்றார்.

கடந்த 23 ஆண்டுகளில் 4-ஆவது முறையாக பாஜக கூட்டணிக்கு மாறி, 9-ஆவது முறையாக பிகார் முதல்வராக பதவியேற்றுள்ளார். அவருக்கு ஆளுநர் ராஜேந்திர ஹர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த நிலையில், பிகார் மாநிலத்தில் தற்போது நடைபெறுவது வெறும் டிரைலர் தான் ஒரு வாரத்தில் தில்லி முதல்வர் கேஜரிவாலும் இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறுவார் என பிப்லப்குமார் தேவ் தெரிவித்தார்.

இது தொடா்பாக சென்னையில் பாஜக அலுவலகமான கமலாலயத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், பிகார் மாநிலத்தில் தற்போது நடைபெறுவது வெறும் டிரைலர் தான். மம்தா, லாலு, அகிலேஷ், ஸ்டாலின் கொண்ட கூட்டணி இந்தியா கூட்டணி அல்ல, குடும்ப கூட்டணி. 

மேலும்,நிதிஷ்குமாரை தொடர்ந்து தில்லி முதல்வர் கேஜரிவாலும் ஒரு வாரத்தில் இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறுவார் என அவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் நடைபெறுவது ஒரு குடும்பத்தின் ஆட்சியே.திமுக மற்றும் காங்கிரஸ் இரண்டு குடும்பங்களின் கட்சி ஆகும். வருகிற மக்களவைத் தோ்தலிலும் கூட திமுக மற்றும் காங்கிரஸ் குடும்பங்களுக்கு இடையே தான் கூட்டணி. திமுகவில் வாரிசுகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும். ஆனால் பாஜகவில் ஒரு சாதாரண தொண்டன் கூட நாளை முதல்வராக மாற முடியும் என பிப்லப்குமார் தேவ் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com