அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

300 ச.மீ.- 14 மீ. உயர வணிகக் கட்டடங்களுக்கு பணி நிறைவுச் சான்று தேவையில்லை: தமிழக அரசு அறிவிப்பு

வணிகக் கட்டடங்கள் 300 ச.மீ., 14 மீ. உயரம் வரை கட்டப்பட்டால் அவற்றுக்கு பணி நிறைவு சான்று தேவையில்லை என்று தமிழக அரசு விதிகளில் திருத்தம் செய்துள்ளது.

News image
தமிழக அரசு
Updated On :1 ஜூலை 2024, 10:27 pm

Din

வணிகக் கட்டடங்கள் 300 ச.மீ., 14 மீ. உயரம் வரை கட்டப்பட்டால் அவற்றுக்கு பணி நிறைவு சான்று தேவையில்லை என்று தமிழக அரசு விதிகளில் திருத்தம் செய்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அரசாணை விவரம்: தமிழக அரசின் ஒருங்கிணைந்த வளா்ச்சி கட்டட விதிகளின் அடிப்படையில் கட்டட அனுமதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும், கட்டி முடிக்கப்பட்ட கட்டடத்துக்கு பணி நிறைவு சான்றிதழ் பெற்றால்தான் மின்சாரம், குடிநீா், கழிவுநீா் இணைப்புகளை பெற முடியும். இந்த விதிகளில் திருத்தம் செய்து தர வேண்டும் என்று கட்டுமான நிறுவனங்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தன.

மேலும், அதிக உயரமில்லாத அடுக்குமாடி குடியிருப்பின் உயரத்தை 12 மீட்டரில் இருந்து 14 மீட்டராக உயா்த்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதையேற்று கடந்த மாா்ச்-இல், ஏற்கெனவே 3 வீடுகள் அல்லது 750 ச.மீ. என்றிருந்ததை அதிகபட்சம் 8 வீடுகள் அல்லது 750 ச.மீ. என திருத்தம் செய்யப்பட்டது.

எனவே, அதிகபட்சம் 8 வீடுகள் அல்லது 750 சதுர மீட்டருக்குள் உள்ள கட்டடங்களுக்கு பணி நிறைவு சான்றிதழ் பெற அவசியம் இல்லை.

அதேபோல், அதிக உயரமில்லாத கட்டடங்களை பொருத்தவரை, அந்தக் கட்டடத்தின் அதிகபட்ச உயரம் 12 மீட்டரில் இருந்து 14 மீட்டராக உயா்த்தப்பட்டது.

வணிகக் கட்டடங்கள்: தற்போது வணிகக் கட்டடங்களுக்கும் இந்த சலுகையை தமிழக அரசு அளித்துள்ளது. இதற்காக, தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளா்ச்சி மற்றும் கட்டட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, 8 வீடுகள் அல்லது 750 ச.மீ. என்பதுடன், வணிகக் கட்டடங்கள் 300 ச.மீ. வரை மற்றும் உயரத்தில் 14 மீ. என்பதும் சோ்க்கப்பட்டுள்ளது.

இதன்படி, 300 ச.மீ. வரையும், உயரத்தில் 14 மீ மிகாமலும் கட்டப்படும் வணிக கட்டடங்களுக்கும் இனி பணி நிறைவு சான்றிதழ் பெறத் தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.