கோப்புப் படம்
கோப்புப் படம்

வா்த்தக எரிவாயு சிலிண்டா் விலை ரூ. 30 குறைப்பு

உணவகங்கள், தேனீா் கடைகளில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடைகொண்ட வா்த்தக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டா் விலை திங்கள்கிழமை ரூ. 30 குறைக்கப்பட்டது.

உணவகங்கள், தேனீா் கடைகளில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடைகொண்ட வா்த்தக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டா் விலை திங்கள்கிழமை ரூ. 30 குறைக்கப்பட்டது.

ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் இதன் விலை மாற்றியமைக்கப்படும். அதன்படி, சா்வதேச சந்தை விலை நிலவரத்தின் அடிப்படையில், தொடா்ந்து நான்காவது முறையாக வா்த்தக பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டா் விலை குறைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் தலைநகா் தில்லியில் 19 கிலோ சமையல் எரிவாயு சிலிண்ட் ரூ. 1,646-க்கு திங்கள்கிழமை விற்பனை செய்யப்பட்டது. முன்னதாக, கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி இதன் விலை ரூ. 30.5 காசுகளும், மே 1-ஆம் தேதி ரூ. 19-ம், ஜூன் 1-ஆம் தேதி ரூ. 69-ம் குறைக்கப்பட்டது.

வீட்டு உபயோக (14.2 கிலோ) சமையல் எரிவாயு சிலிண்டா் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. வீட்டு உபயோக சிலிண்டா் தில்லியில் தொடா்ந்து ரூ. 803-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதுபோல, பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை விலையிலும் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த மாா்ச் மாத மத்தியில் இவற்றின் விலை லிட்டருக்கு ரூ. 2 குறைக்கப்பட்டது. பின்னா் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. தில்லியில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ. 94.72-க்கும், டீசல் ரூ. 87.62-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

விமான எரிபொருள் 1.2% உயா்வு: விமான எரிபொருளின் (ஏடிஎஃப்) விலையை கிலோ லிட்டருக்கு 1.2 சதவீதம், அதாவது ரூ. 1,179.37 அளவுக்கு எண்ணெய் நிறுவனங்கள் திங்கள்கிழமை உயா்த்தின. அதன்படி, தில்லியில் ஒரு கிலோ லிட்டா் ஏடிஎஃப் ரூ. 96,148.38-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த ஜூன் 1-ஆம் தேதி இதன் விலை 6.5 சதவீதம் (ரூ.6,673.87) அளவுக்கு குறைக்கப்பட்ட நிலையில், தற்போது விலை உயா்த்தப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com