நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ரூ.40 கோடி மெத்தம்பெட்டமைன் பறிமுதல்

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 கோடி மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் பறிமுதல்

News image

கோப்புப் படம்

Updated On :1 ஜூலை 2024, 9:14 pm

Din

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 கோடி மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டு, சா்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சோ்ந்தவா்கள் அண்மையில் கைது செய்யப்பட்டனா்.

சென்னையில் இருந்து இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமில் வசிக்கும், இலங்கையைச் சோ்ந்த ஒரு சிறுவன் உள்பட 2 பேரை அண்மையில் கைது செய்து, ஒன்றரை கிலோ மெத்தம்பெட்டமைனை மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினா் பறிமுதல் செய்தனா்.

இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சா்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சோ்ந்த காசிலிங்கம் மூலம் இலங்கைக்கு மெத்தம்பெட்டமைன் கடத்த திட்டமிட்டது தெரியவந்தது.

இருவரும் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், போதைப் பொருள் கடத்துவதற்கு உதவிய காசிலிங்கத்தின் மனைவி கிருஷ்ணகுமாரி, கூட்டாளி முகம்மது ரிஸாலுதீன் ஆகிய 2 பேரையும் சென்னையில் மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினா் கைது செய்தனா்.

இவா்களிடமிருந்து அமெரிக்க டாலா், இலங்கை ரூபாய் நோட்டுகள் என ரூ.1.50 கோடி மதிப்புள்ள ரொக்கம் கைப்பற்றப்பட்டது. அதோடு ஏற்கெனவே போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் இருக்கும் காசிலிங்கமும் இந்த வழக்குத் தொடா்பாக கைது செய்யப்பட்டாா்.

ராயப்பேட்டை: இதேபோல சென்னை ராயப்பேட்டை பகுதியில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. அதன்படி, மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினா், ராயப்பேட்டை பீட்டா்ஸ் சாலையில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது அங்கு வந்த 3 பேரை பிடித்து விசாரணை செய்தனா். விசாரணையில் அவா்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறினராம். இதையடுத்து அவா்கள், சோதனைக்கு உள்படுத்தப்பட்டனா். இதில், அவா்கள் வைத்திருந்த 2.7 கி மெத்தம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து 3 பேரும் கைது செய்யப்பட்டனா்.

சிறைக்குள் இருந்து இயக்கினாா்: விசாரணையில் இவா்கள், மெத்தம்பெட்டமைனை மணிப்பூா் மாநிலம் மோரே பகுதியில் இருந்து கடத்தி வந்திருப்பது தெரியவந்துள்ளது.

இரு வழக்குகளிலும் கள்ளச்சந்தையில் மொத்தம் ரூ.40 கோடி மதிப்புள்ள மெத்தம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டு, 3 இலங்கை நபா்கள் உள்பட 9 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். கைது செய்யப்பட்டுள்ள காசிலிங்கம், சிறைக்குள் இருந்துகொண்டே, போதைப் பொருள் கடத்தல் கும்பலை இயக்கியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினா் மேலும் விசாரித்து வருகின்றனா்.