வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

காஞ்சிபுரத்தில் ஆக்கிரமிப்பு   கோயில்களை அப்புறப்படுத்தக் கோரி மனு: நடவடிக்கை எடுக்க ஆட்சியருக்கு உத்தரவு

காஞ்சிபுரம் கோயில்கள் அகற்ற ஆட்சியருக்கு உயர் நீதிமன்ற உத்தரவு

News image
சென்னை உயர்நீதிமன்றம்
Updated On :3 ஜூலை 2024, 10:00 pm

Din

அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள இரு கோயில்களை அப்புறப்படுத்த கோரிய மனுவை பரிசீலித்து, எட்டு வாரங்களில் நடவடிக்கை எடுக்குமாறு காஞ்சிபுரம் ஆட்சியருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக காஞ்சிபுரத்தை சோ்ந்த முத்துக்குமாா் சென்னை உயா் நீதிமன்றத்தில்  தாக்கல் செய்த மனுவில், ‘காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள ரேணுகா பரமேஸ்வரி விநாயகா் கோயில் மற்றும் துா்க்கை அம்மன் கோயில் ஆகிய இரு கோயில்களும் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன.  

இதன் காரணமாக அந்த பகுதியில் அமைந்துள்ள பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவா்கள் சிரமப்படுவதோடு , அவசர தேவைக்கான, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை உள்ளது.  இரு கோயில்களையும்  அகற்றக்கோரி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.  எனவே, எனது மனு மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தாா். 

மனுவை விசாரித்த தலைமை நீதிபதி(பொ) அரங்க.மகாதேவன், நீதிபதி முகமது சபிக் அடங்கிய முதன்மை அமா்வு, மனுவை பரிசீலித்து  எட்டு வாரங்களில் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தது.