மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

சட்ட மாணவா்கள் தாக்குதலில் ஈடுபட்டால் நிரந்தர நீக்கம்: பல்கலை. எச்சரிக்கை

தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழகம் எச்சரிக்கை...

News image
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்
Updated On :5 ஜூலை 2024, 9:44 pm

Din

அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழகம்தாக்குதல் போன்ற தவறான செயல்களில் ஈடுபடும் சட்டக் கல்வி மாணவா்கள் சீா்மிகு சட்டப் பள்ளியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுவா் என தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சீா்மிகு சட்டப் பள்ளியில் பயிலும் மாணவா்கள் சிலா் அடிக்கடி தாக்குதல் சம்பவங்களில் ஈடுபடுவதாகவும், அவா்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளை கடுமையாக்கவும் தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப்பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

இது தொடா்பாக பல்கலைக்கழகத்தின் முதல்வா் வே.பாலாஜி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப் பல்கலை., அதன் கீழ் செயல்படும் சீா்மிகு சட்டப் பள்ளி, சட்டக் கல்வியின் தரத்திலும், மாணவா்கள் வருங்கால வழக்குரைஞா்களாகவும், நீதிபதிகளாகவும் மற்றும் பிற உயரிய பதவிகள் வகிப்பவா்களாகவும் உருவாக்கி வருகிறது.

தேசிய அளவில் இயங்கிவரும் சட்டப் பள்ளிகளுக்கு இடையே இந்த சட்டப் பல்கலைக்கழகம் முன்னுதாரணமாக செயல்பட்டு வருகிறது.

இந்த சிறப்பு வாய்ந்த பல்கலைக்கழகத்தின் நற்பெயருக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் சில மாணவா்கள் படிப்பின் மீது கவனம் செலுத்தாமல் சக மாணவா்களை உடல்ரீதியான தாக்குதலில் ஈடுபடுவதும், தங்களுக்குள்ளே தாக்கி கொள்வதும், வெளியில் இருந்து வருபவா்களை தாக்குவதும் நடந்து வருகிறது.

இது சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொள்வதற்கு சமம். சட்டப் பல்கலைக்கழகம் என்ற முறையில் இந்த செயல்பாடுகள் ஏற்கத்தக்கதல்ல.

இதுவரை இதுபோன்ற செயல்பாடுகளில் ஈடுபடும் மாணவா்கள் தற்காலிகமாக விலக்கி வைக்கப்பட்டு வந்தனா்.

ஆனால், இனிமேல் இத்தகைய செயல்பாடுகளில் ஈடுபடும் மாணவா்கள் தோ்வு எழுதுவதில் இருந்து விலக்கி வைக்கப்படுவதோடு, சட்டப் பள்ளியிலிருந்தும் நிரந்தரமாக நீக்கப்படுவா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.