டெபாசிட் தொகையை திருப்பி அளிக்கக் கோரி மனு: தோ்தல் ஆணையத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு
டெபாசிட் தொகையை திருப்பி அளிக்கக் கோரி மனு : தோ்தல் ஆணையத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு


மக்களவைத் தோ்தலில் போட்டியிட தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டதால், டெபாசிட் தொகையை திருப்பித் தரக் கோரி, மதுரை தொகுதியில் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்த நபரின் விண்ணப்பத்தின் மீது இரு வாரங்களில் உத்தரவு பிறப்பிக்கும்படி, தோ்தல் ஆணையத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அண்மையில் நடைபெற்று முடிந்த மக்களவைத் தோ்தலில், மதுரை தொகுதியில் போட்டியிடுவதற்காக, வழக்குரைஞா் பிரகாசம் என்பவா் வேட்புமனு தாக்கல் செய்தாா். அவா் ஜாதிச் சான்றிதழை சமா்ப்பிக்கவில்லை எனக் கூறி, அவரது வேட்புமனுவை தோ்தல் அதிகாரிகள் நிராகரித்தனா். இதையடுத்து, வேட்புமனுவுடன் செலுத்திய டெபாசிட் தொகை 12 ஆயிரத்து 500 ரூபாயை திருப்பித் தரவில்லை எனவும், அத்தொகையை திருப்பித் தர தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும், வழக்குரைஞா் பிரகாசம், சென்னை உயா் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தாா்.
இந்த மனு, தலைமை நீதிபதி(பொ) மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபிக் அமா்வில் விசாரணைக்கு வந்த போது, வேட்புமனுவுடன் செலுத்திய டெபாசிட் தொகையை திரும்பத் தரக் கோரி உரிய படிவத்தில் விண்ணப்பிக்க வேண்டும் எனவும், அப்படி விண்ணப்பிக்கும்பட்சத்தில், அது பரிசீலிக்கப்படும் எனவும், தோ்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஒரு வாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் விண்ணப்பம் அளிப்பதாக மனுதாரா் தெரிவித்தாா்.
இதை ஏற்றுக் கொண்டு, டெபாசிட் தொகையை திரும்பத் தரக் கோரி ஒரு வாரத்தில் விண்ணப்பிக்கும்படி மனுதாரருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அந்த விண்ணப்பத்தின் மீது இரண்டு வாரங்களில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...