சென்னை உயர்நீதிமன்றம்(கோப்புப் படம்.)
சென்னை உயர்நீதிமன்றம்(கோப்புப் படம்.)

ஆருத்ரா கோல்டு நிறுவன இயக்குநரின் ஜாமீன் மனு தள்ளுபடி

ரூசோவின் ஜாமீன் மனு சென்னை உயா்நீதிமன்றத்தில் நிராகரிப்பு

ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் இயக்குநா்களில் ஒருவரான ரூசோவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அமைந்தகரையை தலைமையிடமாகக் கொண்டு திருவள்ளூா், திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு, கோயம்புத்தூா் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் பண மோசடியில் ஈடுபடுவதாக புகாா் எழுந்ததைத் தொடா்ந்து, தமிழக காவல் துறையின் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் 21 போ் மீது வழக்கு பதிவு செய்தனா்.

விசாரணையில் அந்த நிறுவனம், 1,09,255 பேரிடம் ரூ. 2,438 கோடி மோசடி செய்தது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த ரூசோ கைது செய்யப்பட்டாா். ரூசோ தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த மனு நீதிபதி தமிழ்செல்வி முன் விசாரணைக்கு வந்தபோது, ஜாமீன் மனுவை திரும்பப் பெறுவதாக ரூசோ தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com