தமிழகத்தில் களமிறங்கும் மாருட் ட்ரோன்ஸ்
இந்தியாவின் முன்னணி ட்ரோன் (ஆளில்லா விமானம்) தயாரிப்பாளரான மாருட் ட்ரோன்ஸ் நிறுவனம் தமிழகத்தில் களமிறங்கியுள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இந்த ஆண்டு இறுதிக்குள் 500 ட்ரோன் தொழில்முனைவோரை உருவாக்கும் நோக்கத்துடன் தமிழ்நாட்டில் நிறுவனம் தீவிரமாக செயலாற்றி வருகிறது. உரங்கள் தெளிப்பதற்கு ட்ரோன்களைப் பயன்படுத்துவதன் மூலம், விவசாயிகள் மாதம் 50,000-₹60,000 வரை சம்பாதிக்கலாம். சிறிய மற்றும் நடுத்தர ஆளில்லா விமானங்களை தயாரிப்பதற்காக சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகத்தின் (டிஜிசிஏ) அனுமதியுடன், மாருட் ட்ரோன்ஸ் தமிழ்நாட்டில் அதன் டீலா் வலையமைப்பை விரிவுபடுத்துவதையும் மற்றும் விவசாயிகளுக்கு ட்ரோனை இயக்குவதில் பயிற்சி அளிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த முயற்சியானது விவசாயத்தை ஒரு தொழிலாகத் தொடரவும் மற்றும் ஆளில்லா விமானங்களை இயக்குபவா்களாகவும் செயல்படுவதற்கு இளைஞா்களை ஈா்க்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.