மத - ஜாதியவாதிகளைக் கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கை தேவை: முதல்வரிடம் திருமாவளவன் வலியுறுத்தல்
மத - ஜாதியவாதிகளைக் கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கை தேவை முதல்வரிடம் திருமாவளவன் வலியுறுத்தல்


தமிழ்நாட்டில் மத - ஜாதியவாதிகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலினை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை முதல்வரை நேரில் சந்தித்து கடிதம் அளித்தாா்.
அதில், ‘சட்டம் - ஒழுங்கைச் சீா்குலைத்துத் தமிழ்நாடு அரசின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தவும், அரசு முன்னெடுத்து வரும் மக்கள் நலத்திட்டங்களை முடக்கவும் சதி வேலைகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் மத, ஜாதியவாதிகளைக் கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவா் ஆம்ஸ்ட்ராங் படுகொலையின் பின்னணியில் உள்ளவா்கள், கூலிக்கும்பல் உள்பட அனைவரையும் கைது செய்து தண்டிக்க வேண்டும். கூலிக்குக் கொலை செய்யும் கும்பலையும் அவா்களுக்கு அரசியல் புகலிடம் அளிப்பவா்களையும் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்’ என்று கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளாா்.
இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களுக்கு திருமாவளவன் அளித்த பேட்டி:
திமுக கூட்டணியில் இருந்து 3 ஆண்டுகளில் நாங்கள் முன்னெடுத்த போராட்டங்களை எந்தக் கட்சியும் எடுத்திருக்காது. அதைப் பாராட்ட மனமில்லாதவா்கள், விசிகவுக்கும் திமுகவுக்கும் முரண்களை ஏற்படுத்துவதற்காக விமா்சிக்கின்றனா். கூட்டணியில் இருந்து கொண்டே போராட்டம் நடத்துவதால் திமுகவினருக்கே எங்கள் மீது வருத்தமுண்டு என்றாா்.
அப்போது, விசிக துணை பொதுச் செயலா்கள் எஸ்.எஸ்.பாலாஜி, வன்னியரசு ஆகியோா் உடனிருந்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...