தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு!

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

News image
செந்தில் பாலாஜி
Updated On :12 ஜூலை 2024, 10:55 am

DIN

அமலாக்கத் துறை வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய மனு மீதான உத்தரவை ஒத்திவைக்கக் கோரி செந்தில் பாலாஜியின் மனு தள்ளுடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை ஒத்திவைக்கக் கோரி, முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி அல்லி முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில் வாதங்களைத் தொடங்காததால், விசாரணையை ஒத்திவைக்கக் கோரிய மனு மீது ஜூலை 12 ஆம் தேதி உத்தரவு பிறப்பிப்பதாக நீதிபதி தெரிவித்தாா்.

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அமலாக்கத் துறை வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய மனு மீதான உத்தரவை ஒத்திவைக்கக் கோரி செந்தில் பாலாஜியின் மனு தள்ளுடி செய்துள்ளது.

அதோடு செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை ஜூலை 22-ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. சிறப்பு அமர்வில் உள்ள வழக்குகளை விசாரிக்க செல்வதால், செந்தில் பாலாஜியின் வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவரது நீதிமன்றக் காவலை 45-ஆவது முறையாக நீட்டித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.