விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் திமுக முன்னிலை வகிக்கிறது.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை, இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. ஏழாவது சுற்றில் அன்னியூர் சிவா 44,780 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். அவரைத் தொடர்ந்து, பாமகவின் சி.அன்புமணி 17,539 வாக்குகள் பெற்று இரண்டாவதாக உள்ளார். நாம் தமிழர் கட்சியின் பொ.அபிநயா வெறும் 3,556 வாக்குகள் மட்டுமே பெற்று பின்னடைவில் உள்ளார்.
ஆறாவது சுற்றில் அன்னியூர் சிவா 38,554 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்தார். அவரைத் தொடர்ந்து, பாமகவின் சி.அன்புமணி 13,656 வாக்குகள் பெற்றார். நாம் தமிழர் கட்சியின் பொ.அபிநயா வெறும் 3,178 வாக்குகள் மட்டுமே பெற்று பின்னடைவு பெற்றார்.
விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை 20 சுற்றுகளாக நடைபெறும் நிலையில், பிற்பகல் 12 மணிக்குள் வெற்றி நிலவரம் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக இருந்த திமுகவைச் சேர்ந்த நா.புகழேந்தி உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் ஜூலை 10-ஆம் தேதி நடைபெற்றது
1,16,962 ஆண் வாக்காளர்கள், 1,20,040 பெண் வாக்காளர்கள், 29 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தமாக 2,37,031 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில், 95,536 ஆண் வாக்காளர்கள், 99,444 பெண் வாக்காளர்கள், 15 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தமாக 1,95,495 வாக்காளர்கள் வாக்களித்தனர். இது 82.48 சதவீத வாக்குப்பதிவாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிகாா் இடைத்தோ்தல்: பிரசாந்த் கிஷோா் போட்டி

3 மாநிலங்களுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு! தமிழ்நாட்டுக்கு இல்லை!

அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்த எம்.ஆர். விஜயபாஸ்கர்! த.வெ.க.வில் சேருகிறார்?

பெரு அதிபா் தோ்தல்- கெய்கோ ஃபுஜிமோரி வரலாற்று வெற்றி உறுதி
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



