நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு!

ஒரு யூனிட்டுக்கு ரூ. 4.60 காசிலிருந்து ரூ.4.80 ஆக மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :15 ஜூலை 2024, 10:00 pm IST

தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்தி, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி ஒரு யூனிட்டுக்கு ரூ. 4.60 காசிலிருந்து ரூ.4.80 ஆக மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

ஜூலை 1ஆம் தேதி முதல் மின் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மின் கட்டண உயர்வு தொடர்பாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

0 - 400 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ. 4.60 காசிலிருந்து ரூ.4.80 ஆக மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

401 - 500 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு ஒரு யூனிட் ரூ.6.15 ஆக இருந்த மின் கட்டணம் 30 காசுகள் உயர்ந்து ரூ.6.45ஆக அதிகரித்துள்ளது.

601 - 800 வரை ஒரு யூனிட்டுக்கு ரூ. 9.20ஆக இருந்த மின் கட்டணம் 45 காசு அதிகரித்து ரூ.9.65 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

801 - 1000 யூனிட் வரை ரூ.10.12 ஆக இருந்த மின் கட்டணம் ரூ.10.70 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ஆயிரம் யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு ரூ. 11.25 ஆக இருந்த மின் கட்டணம் ரூ.11.80ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான மின் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு ரூ. 8.15-லிருந்து ரூ. 8.55ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விசைத்தறிகளுக்கு 500 கிலோ வாட்டுக்கு மேல் ஒரு யூனிட்டுக்கு ரூ.7.65-லிருந்து ரூ.8 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

குடிசை, குறு நிறுவன மின் கட்டணம் 500 கிலோ வாட்டுக்கு மேல் ஒரு யூனிட்டுக்கு ரூ.6.95ஆக உயர்ந்துள்ளது.

ரயில்வே மற்றும் ராணுவ குடியிருப்புகளுக்கான மின் கட்டணம் ரூ.8.15-லிருந்து ரூ.8.55 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

கிராம பஞ்சாயத்து குடிசைகள், தாட்கோ நிறுவனங்களுக்கு மின் கட்டணம் ரூ.9.35-லிருந்து ரூ.9.80ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மின் கட்டண உயர்வுக்கு அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.