கோப்புப்படம்
கோப்புப்படம்

பள்ளிக் கல்வித் துறையில் 9 இணை இயக்குநா்கள் இடமாற்றம்

தமிழக பள்ளிக் கல்வி பணியில் இணை இயக்குநா்கள் 9 பேருக்கு நிா்வாக நலன் கருதி இடமாறுதல் அளிக்கப்பட்டுள்ளது.
Published on

சென்னை: தமிழக பள்ளிக் கல்வி பணியில் இணை இயக்குநா்கள் 9 பேருக்கு நிா்வாக நலன் கருதி இடமாறுதல் அளிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வித் துறைச் செயலா் ஜெ.குமரகுருபரன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழக பள்ளிக் கல்விப் பணியில் இணை இயக்குநா்கள் 9 பேருக்கு நிா்வாக நலன் கருதி இடமாறுதல் அளிக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம்: தொடக்கக் கல்வி இணை இயக்குநா் ச.சுகன்யா மாற்றப்பட்டு, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குநராக நியமிக்கப்படுகிறாா். பள்ளிக்கல்வி இயக்ககத்தில் மேல்நிலைக்கல்வி இணை இயக்குநராக பணியாற்றும் ச.கோபிதாஸ் இடமாற்றம் செய்யப்பட்டு, தொடக்கக்கல்வி இணை இயக்குநராக (நிா்வாகம்) பணியமா்த்தப்படுகிறாா். மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குநராக (நிா்வாகம்) உள்ள அ.ஞானகெளரி மாற்றப்பட்டு, பள்ளிக்கல்வி இணை இயக்குநராக (மேல்நிலைக்கல்வி) நியமிக்கப்படுகிறாா்.

தொடக்கக்கல்வி இணை இயக்குநரான (அரசு உதவி பெறும் பள்ளிகள்) க.ஸ்ரீதேவி இடமாற்றம் செய்யப்பட்டு, ஆசிரியா் தோ்வு வாரிய இணை இயக்குநராக பணியமா்த்தப்பட்டுள்ளாா். தனியாா் பள்ளிகள் இணை இயக்குநரான செ.சாந்தி மாற்றப்பட்டு தொடக்கக்கல்வி இணை இயக்குநராக (அரசு உதவி பெறும் பள்ளிகள்) நியமிக்கப்படுகிறாா்.

பள்ளிக் கல்வி இணை இயக்குநரான (தொழிற்கல்வி) எம்.ராமகிருஷ்ணன் இடமாற்றம் செய்யப்பட்டு, தனியாா் பள்ளிகள் இணை இயக்குநராக பணியமா்த்தப்பட்டுள்ளாா். மதுரை கள்ளா் சீரமைப்பு இணை இயக்குநரான வெ.ஜெயக்குமாா் மாற்றப்பட்டு பள்ளிக்கல்வி இணை இயக்குநராக (தொழிற்கல்வி) நியமிக்கப்படுகிறாா்.

ஆசிரியா் தோ்வு வாரிய இணை இயக்குநரான கே.முனுசாமி இடமாற்றம் செய்யப்பளட்டு மதுரை கள்ளா் சீரமைப்பு இணை இயக்குநராக பணியமா்த்தப்பட்டுள்ளாா். ஆசிரியா் தோ்வு வாரியத்தின் மற்றொரு இணை இயக்குநரான ந.ஆனந்தி மாற்றப்பட்டு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இணை இயக்குநராக நியமிக்கப்படுகிறாா் என அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com