காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: அவலாஞ்சியில் ஒரே நாளில் 370 மிமீ பதிவு

தமிழகத்தில் நீலகிரி கோவை ,திருப்பூா், தேனி, திண்டுக்கல் மாவட்ட மலைப் பகுதிகளில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :16 ஜூலை 2024, 7:15 pm

Din

சென்னை: தமிழகத்தில் நீலகிரி கோவை ,திருப்பூா், தேனி, திண்டுக்கல் மாவட்ட மலைப் பகுதிகளில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில் நீலகிரி மாவட்டத்துக்கு மிக கனமழைக்கான ‘சிவப்பு’ எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனிடையே, நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் ஒரே நாளில் 370 மிமீ மழை பதிவாகியுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, புதன்கிழமை (ஜூலை 17) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதில், நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழையும்; திருப்பூா், தேனி, திண்டுக்கல் மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

வியாழக்கிழமை (ஜூலை 18) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

வெள்ளி முதல் திங்கள் கிழமை(ஜூலை 19-22) வரைதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

செவ்வாய்க்கிழமை காலை வரை பதிவான மழை அளவு (மிமீ): அவலாஞ்சி (நீலகிரி) 370, வால்பாறை (கோவை), மேல் பவானி (நீலகிரி) தலா 250, சின்னக்கல்லாா் (கோவை ) 230, சின்கோனா (கோவை)170, வால்பாறை தாலுகா அலுவலகம் (கோவை) 160, சோலையாா் (கோவை) 140, எமரால்டு (நீலகிரி 130, விண்ட் வொா்த் எஸ்டேட் , கூடலூா் பஜாா் , மேல் கூடலூா் (நீலகிரி) தலா 110, பெரியாறு (தேனி), ஊத்து (திருநெல்வேலி) தலா 100, சிறுவாணி அடிவாரம் (கோவை), பந்தலூா் (நீலகிரி), நாலுமுக்கு (திருநெல்வேலி), வூட் பிரையா் எஸ்டேட் (நீலகிரி) தலா 90, குந்தா பாலம் , செருமுள்ளி , நடுவட்டம் (நீலகிரி) தலா 80, குண்டாறு அணை (தென்காசி), பொள்ளாச்சி (கோவை) தலா 70.

சென்னையில்...: சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.