மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.கிருஷ்ணகுமார் நியமனம்

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம்.

News image
டி.கிருஷ்ணகுமார்
Updated On :16 ஜூலை 2024, 10:54 am

DIN

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.கிருஷ்ணகுமார் செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்த கங்காபூர்வாலா, கடந்த மே மாதத்துடன் ஓய்வு பெற்றார். இதனைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி ஆர்.மகாதேவன் பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் காலியாகவுள்ள இரண்டு நீதிபதி இடங்களுக்கு புதிய நீதிபதிகள் இன்று நியமனம் செய்யப்பட்டனர்.

அதன்படி, சென்னை பொறுப்பு தலைமை நீதிபர் மகாதேவன் உச்சநீதிமன்றத்துக்கு மாற்றி குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி டி.கிருஷ்ணகுமார் பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.