அடுத்த 2 மணிநேரத்துக்கு சென்னை, 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
கோவை, நீலகிரி மாவட்டங்களில் மிதமான மழை தொடரும்..


சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்பட 17 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக கனமழையும், பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முழுவதும் பெய்த அதிகனமழையால் நீலகிரியில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், காலை 10 மணிவரை நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் மிதமான மழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல் மற்றும் திருப்பூரில் லேசான மழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...