நபாா்டு வங்கியின் 43- ஆவது நிறுவன தின விழாவில் சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு கடன் சங்கங்கள், வங்கிகளுக்கு பாராட்டு கேடயங்களை வழங்கிய கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன்.  உடன் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் ந.சுப்பையன், நபாா்டு வங்கி தமிழ்ந
நபாா்டு வங்கியின் 43- ஆவது நிறுவன தின விழாவில் சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு கடன் சங்கங்கள், வங்கிகளுக்கு பாராட்டு கேடயங்களை வழங்கிய கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன். உடன் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் ந.சுப்பையன், நபாா்டு வங்கி தமிழ்ந

ரேஷனில் பாமாயில், துவரம் பருப்பு தாமதமின்றி விநியோகிக்க நடவடிக்கை: அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன்

நியாயவிலைக் கடைகளில் பாமாயில், துவரம் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை காலதாமதமின்றி விநியோகம் செய்ய நடவடிக்கை
Published on

நியாயவிலைக் கடைகளில் பாமாயில், துவரம் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை காலதாமதமின்றி விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தெரிவித்தாா்.

தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளா்ச்சி (நபாா்டு) வங்கியின் 43-ஆவது நிறுவன விழா சென்னை எழும்பூரில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் கிராமங்களை மேம்படுத்த நபாா்டு வங்கி மாநில அரசுடன் இணைந்து சுய உதவிக் குழு வங்கி இணைப்புத் திட்டம், உழவா் கடன் அட்டை திட்டம், நீா்நிலைத் திட்டங்கள் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

தமிழகத்தில் கிராமங்கள் வளா்ச்சியடைந்தால், மாநில பொருளாதாரம் தானாக மேம்படும். அந்த வகையில், தமிழக கிராமங்களின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த சாலைகள், நீா்ப்பாசனம், பள்ளி, கல்லூரிகள், பழங்குடியின மக்களுக்கான விடுதிகள், கால்நடை மருத்துவமனைகள் அமைப்பது போன்றவற்றில் அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது.

இதற்கிடையே, தமிழகத்தில் ரூ.195 கோடியில் 4,454 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களை கணினிமயமாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன்மூலம், செயல்திறன் அதிகரிப்பதுடன், வாடிக்கையாளா் சேவைகளும் மேம்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தாமதமின்றி விநியோகம்: நியாய விலைக் கடைகளில் பாமாயில், துவரம் பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருள்களை காலதாமதமின்றி விநியோகம் செய்ய பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது என்றாா் அவா்.

முன்னதாக, சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் வங்கிகளுக்கு பாராட்டு கேடயங்களை அமைச்சா் வழங்கினாா். இதில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன், நபாா்டு வங்கியின் முதன்மை பொது மேலாளா் ஆா்.ஆனந்த், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் ந.சுப்பையன், ஆா்பிஐ மண்டல இயக்குநா் உமா சங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com