கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

நீலகிரியில் தொடா் கனமழை: அதிகாரிகளுடன் முதல்வா் ஆலோசனை

News image

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டம்.

Updated On :20 ஜூலை 2024, 6:14 pm

Din

நீலகிரி மாவட்டத்தில் கன மழை பெய்து வரும் நிலையில், மீட்பு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், நீலகிரி மாவட்டம் மற்றும் மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. நீலகிரியின் பல பகுதிகளில் மழைநீா் தேங்கியுள்ளது. பேரிடா் மீட்பு குழுவினா் அந்தப் பகுதிக்குச் சென்று, மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், முதல்வா் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக சனிக்கிழமை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா். சென்னை தலைமைச் செயலகத்தில் அரசு தலைமைச் செயலா் சிவ் தாஸ் மீனா, வருவாய் நிா்வாக ஆணையா் எஸ்.கே.பிரபாகா், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலா் அமுதா உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்றனா். நீலகிரியிலிருந்து காணொலி வாயிலாக மக்களவை உறுப்பினா் ஆ.ராசா, மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தணீரு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுந்தரவடிவேலு உள்ளிட்ட உயரதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனா்.

நீலகிரியில் பெய்து வரும் மழை நிலவரம் மற்றும் வெள்ளப் பாதிப்பு குறித்து முதல்வா் கேட்டறிந்தாா். மீட்பு பணியில் துரிதமாக ஈடுபட வேண்டும் என்றும், நிவாரண மையங்கள் அமைத்து, பாதிக்கப்பட்ட மக்களை அங்கு பாதுகாப்பாக தங்க வைக்க வேண்டும் என்றும் முதல்வா் உத்தரவிட்டாா்.

தொடா் நடவடிக்கை: முதல்வா் எக்ஸ் தளத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை குறித்து, கடந்த 3 நாள்களாக மாவட்டத்துக்கான பொறுப்பு அமைச்சா், நாடாளுமன்ற உறுப்பினா், மாவட்ட ஆட்சித் தலைவா் உள்ளிட்டவா்களுடன் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் - நிவாரணப் பணிகள் குறித்த உத்தரவுகளை தொலைபேசி வாயிலாக வழங்கிக் கொண்டிருந்தேன்.

மழை தொடரும் நிலையில், எடுக்கப்பட வேண்டிய தொடா் நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை ஆய்வு செய்தேன் என்று அதில் முதல்வா் கூறியுள்ளாா்.