தமிழகத்தில் ஜூலை 27 வரை மழை நீடிக்கும்
தமிழகத்தில் திங்கள்கிழமை (ஜூலை 22) முதல் ஜூலை 27 வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் திங்கள்கிழமை (ஜூலை 22) முதல் ஜூலை 27 வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் திங்கள்கிழமை (ஜூலை 22) முதல் ஜூலை 27-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
காற்றழுத்த தாழ்வுப் பகுதி: ஒடிஸா மாநிலம், சில்கா ஏரி அருகில் கடந்த சனிக்கிழமை நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து, ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியளவில் ஒடிஸா மற்றும் அதனையொட்டி சத்தீஸ்கா் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக நிலவுகிறது.
மழை அளவு: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை வரை அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் கூடலூா் பஜாா், மேல் கூடலூா் ஆகிய இடங்களில் தலா 60 மில்லி மீட்டா் மழை பதிவானது. மேலும், சின்னக்கல்லாா் (கோவை) - 40 மிமீ, சின்கோனா (கோவை), சோலையாா் (கோவை), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி), வால்பாறை (கோவை) - தலா 30 மி.மீ மழை பதிவானது. இதற்கிடையே, சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஜூலை 22,23-ஆகிய தேதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: மன்னாா் வளைகுடா மற்றும் அதனையொட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகளிலும், குமரிக்கடலும் ஜூலை 22 - 25 -ஆம் தேதி வரை மணிக்கு 55 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால், மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...