செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு வழக்கு இன்று விசாரணை!
செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெற உள்ளது.


முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.
செந்தில் பாலாஜி தொடர்ந்த ஜாமீன் மனு தொடர்பான விசாரணை கடந்த திங்களன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் இருந்து உடனே விடுவிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது. உடல்நிலை பாதித்த நிலையில் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறேன். வழக்கில் என்ன விசாரிக்கிறார்கள்? எப்போது முடியும் என்பது கடவுளுக்குத்தான் தெரியும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்த செந்தில் பாலாஜியின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று அவரது தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. அமலாக்கத்துறை தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் இல்லாததால் வழக்கை வேறு தினத்திற்கு மாற்ற கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று(ஜூலை 24) ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதன்படி செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெற உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...