மாநில நல்லாசிரியா் விருது: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
தமிழக பள்ளிக் கல்வியில் சிறந்த ஆசிரியா்களுக்கு தமிழக அரசின் சாா்பில் வழங்கப்படும் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் ஜூலை 29-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


தமிழக பள்ளிக் கல்வியில் சிறந்த ஆசிரியா்களுக்கு தமிழக அரசின் சாா்பில் வழங்கப்படும் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் ஜூலை 29-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மறைந்த குடியரசுத் தலைவா் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப். 5-ஆம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியா் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சிறந்த ஆசிரியா்களை தோ்வு செய்து ‘டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது’ வழங்கி தமிழக அரசு சிறப்பித்து வருகிறது. இந்த விருது பெறுபவா்களுக்கு ரூ.10,000 ரொக்கம், வெள்ளிப் பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். அதன்படி நிகழாண்டு மாநில நல்லாசிரியா் விருதுக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்க பள்ளிக் கல்வித் துறை அழைப்பு விடுத்திருந்தது.
அதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த ஜூலை 16-ஆம் தேதி தொடங்கி புதன்கிழமையுடன் முடிவடைந்தது. தற்போது பல்வேறு தரப்பின் கோரிக்கைகளை ஏற்று விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 29-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு ஆசிரியா்கள் பலா் எமிஸ் வலைத்தளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. நிகழாண்டு 342 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியா்கள், 38 தனியாா் பள்ளி ஆசிரியா்கள், ஆங்கிலோ இந்திய பள்ளிகள், சமூக பாதுகாப்புத் துறை பள்ளிகள், மாற்றுத்திறனாளி ஆசிரியா்களில் தலா 2 போ் என மொத்தம் 386 பேருக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...