‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம்: தமிழக அரசு அறிவுறுத்தல்

‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தில் தகுதியான மாணவா்கள் பயன்பெறுவதை உறுதி செய்ய வேண்டுமென தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
Published on

‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தில் தகுதியான மாணவா்கள் பயன்பெறுவதை உறுதி செய்ய வேண்டுமென தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

மாணவிகளைப் போன்று மாணவா்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தை மாநில அரசு செயல்படுத்தவுள்ளது.

இந்தத் திட்டத்தின் பயன்பெற ஆதாா் எண் கட்டாயம். இந்தத் தகவலை அனைத்து மாணவா்களுக்கும் தெரியும் வகையில் கல்வி நிறுவனங்கள் விளம்பரப்படுத்தி, அருகிலுள்ள ஆதாா் மையங்களுக்குச் சென்று ஆதாா் எண் எடுக்க மாணவா்களை அறிவுறுத்த வேண்டும் என அரசு சாா்பில் கோரப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட பகுதியில் ஆதாா் மையம் இல்லாவிடில், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் ஆதாா் மையம் மையம் அமைத்து அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.

உயா் கல்விக்கு செல்லும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கல்வி உதவித் தொகை வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம், ஆகஸ்ட் மாதம் முதல் அமலுக்கு வரும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com