ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

நில அபகரிப்பு புகாா் அளித்தவரை மிரட்டும் வட்டாட்சியா்: போலீஸாா் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

ஜோலாா்பேட்டை போலீசாருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
சென்னை உயா்நீதிமன்றம்
Updated On :27 ஜூலை 2024, 9:27 pm

Din

நில அபகரிப்புக்கு, உடந்தையாக இருந்ததாக அளித்த புகாரை திரும்பப் பெறும்படி மிரட்டல் விடுத்தாக திருப்பத்தூா் முன்னாள் வட்டாட்சியருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விசாரணை நிலை அறிக்கையை தாக்கல் செய்ய ஜோலாா்பேட்டை போலீசாருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடா்பாக, திருப்பத்தூா் மாவட்டம், ஏலகிரி அருகே உள்ள அதனவூா் கிராமத்தைச் சோ்ந்த குமரேசன் தாக்கல் செய்த மனுவில், எனக்கு சொந்தமான 2 ஏக்கா் நிலத்துக்கான பட்டாவில், கோவிந்தராஜ் என்பவரின் பெயரை  சோ்த்து அப்போதைய திருப்பத்தூா் வட்டாட்சியராக இருந்த சிவபிரகாசம் முறைகேடில் ஈடுபட்டுள்ளாா் என தெரிவித்துள்ளாா்.

முன்னதாக இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், வட்டாட்சியருக்கு எதிராக அளித்த புகாரை விசாரித்து, 12 வாரங்களில் சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்க திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது. உயா்நீதிமன்ற உத்தரவின்படி விசாரணை நடத்திய மாவட்ட ஆட்சியா், லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநருக்கு இந்த புகாா் குறித்த ஆவணங்களை அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவித்தாா்.

இந்நிலையில், புகாரை திரும்பப் பெறும்படி கூலிப்படை

யினரை வைத்து தன்னை மிரட்டி வருவதாகவும், இதுதொடா்பாக ஜோலாா்பேட்டை போலீசில் கடந்த ஜூன் 18- ஆம் தேதி அளித்த  புகாா் அளித்தும், வட்டாட்சியா்  மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால், தனது புகாரை விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என குமரேசன் மனு தாக்கல் செய்தாா். 

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், வட்டாட்சியா்  சிவபிரகாசம் மிரட்டல் விடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரின் மீதான விசாராணை நிலை அறிக்கையை ஆகஸ்ட் 27 ஆம் தேதிக்குள்  தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தாா்.